ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர் . ராமநாதபுரத்திலிருந்து முதுகுளத்தூர் சென்ற அரசு பேருந்தும், ராமநாதபுரம் நோக்கி சென்ற 2 பேருந்துகளும் ஆலங்குளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் என சுமார் 25 பேர் காயம் அடைந்தனர்.