R. கல்யாண முருகன் செய்தியாளர்
விருத்தாசலம்
விருத்தாசலம் நகரில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் பொதுமக்களின் நலன்கருதி, விஜய் ஹைஸ்டைல் மற்றும் விஜய் சூப்பர் மார்க்கெட் சார்பில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 30 பேரிகார்டுகள் விருத்தாசலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. பேரிகார்டுகளை விஜய் ஹேஸ்டைல் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் செந்தில் இளமாறன் சார்பில் மேலாளர் வினோத் விருத்தாசலம் டி எஸ் பி
பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சந்துரு, சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.