பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420
தாராபுரம் 7 -கோடியே- 66 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய புதிய கட்டுமான பணிகளை அமைச்சர்கள். சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது இது பழைய அலுவலகம் என்பதால் அலுவலர்களுக்கு போதுமான இட வசதி இல்லை மேலும் பொதுமக்கள் வந்து செல்வதற்கு இடையூறாகவும் இருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விரிவுபடுத்த வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் வியாழக்கிழமை இன்று மாலை புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் இருந்து தலைவர்கள்.
துணைத் தலைவர்கள் .வார்டு உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வளமேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நஞ்சியம்பாளையம் ஊராட்சி, தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரில் 7- கோடியே 66-லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ்ராஜா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.