கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே பாபநாசம் தொகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம் , அங்கன்வாடி கட்டிடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபுராஜபுரம், ராமானுஜபுரம்,
திருமண்டங்குடி, அளவந்திபுரம், உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி கட்டிடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கும்பகோணம் கோட்டாட்சியர் ஹிருத்யா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் கோவிஅய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், ரெங்கசாமி மற்றும் நகரப் பேரூர் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.