கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் வேலு நாச்சியார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்கா முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரமங்கை வேலு நாச்சியாரின் 295 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிஜாம் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் சட்டமன்ற பொறுப்பாளர் வினோத் ரவி, தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் முத்து, மகளிரணி தலைவர் பிரபாவதி, நிர்வாகி தாராசுரம் பிரபாகரன், மருத்துவர் அஜய், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.