தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா 10ம் திருநாளான வருகிற ஜனவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடி தாரர்கள் செய்து வருகின்றனர்.