தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் 25 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு 8 கி.மீ. வீராங்கனைகளுக்கு 5 கி.மீ. மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கு 10 கி.மீ.. வீராங்கனைகளுக்கு 5 கி.மீ. என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு. அந்தோணி அதிஷ்டராஜ் அவர்கள்,பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 170 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

வெற்றி வீரர். வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ. 5,000/-. இரண்டாம் பரிசு தலா ரூ. 3,000/-. மூன்றாம் பரிசு தலா ரூ. 2,000/- 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ. 1,000/- வீதம் பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *