வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் அப்பர் குடிலில் மார்கழி மாத சதய விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் அப்பர் குடிலில் மார்கழி மாத சதய விழா நடைபெற்றது. 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை போற்றி வழிபாடு செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலங்குடி திருக்கயிலை சிவ பூதகண திருக்கூட்டம் திருக்குடந்தை என்ற அமைப்பினர் செய்திருந்தனர்.