எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் எதிரே ஆனைக்காரசத்திரம், கோபால சமுத்திர ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பேரணியாக சென்று சாலையில் அமர்ந்து போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட பகுதியான ஆனைக்கார சத்திரம்,கோபாலசமுத்திரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை சேர்ந்து கொள்ளிடம் பேருராட்சியாக அறிக்கப்பட்டதை கண்டித்து 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபாலசமுத்திரம் மற்றும் ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சிகளில் உள்ள 27வார்டுகளில் 3 வார்டுகளை தவிர்த்து மீதமுள்ள 24 வார்டுகளைக் கொண்டு கொள்ளிடம் பேரூராட்சியாக உருவாக்கப்பட உள்ளது.
விவசாய தொழிலாளர்களும்,கூலிதொழிளாலர்களும் நிறைந்த இந்த பகுதியை பேரூராட்சியாக உருவாக்கினால் ஊராட்சி உரிமைகள் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்களை பயன்பெற முடியாது மற்றும் வரிச்சுமை அதிகரிக்கும் என்பதால் பேரூராட்சியாக உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் வரை பேரணியாக புறப்பட்டு சென்ற பொதுமக்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி மக்களிடம் கருத்து கேட்காமல் பேருராட்சியாக மாற்றிய தமிழக அரசை கண்டித்தும்,அரசானை 204 ரத்து செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களிடம் சீர்காழி வட்டாட்சியர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் கொள்ளிடம் மகேந்திரப்பள்ளி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது