C K RAJAN Cuddalore District Reporter
9488471235
கடலூரில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
கடலூர்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மழைநீர் சூழ்ந்து பல இடங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட கிராமங்கள் அழகிய நத்தம் மஞ்சகுப்பம் காரைக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை சார்பில் ஜப்பானந்தா சுவாமி மூலமாக அன்னை தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் ஜி கே தாஸ் அறிவுறுத்தலின் பேரில் மாநில பொறுப்பாளர்கள் மரியதாஸ் சிவாஜி முன்னிலையில் மாநிலத் துணை பொதுச் செயலாளர் டாக்டர் சோபன்பாபு தலைமையில் ஜப்பானந்த சுவாமிஜி ரூபாய் 3000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை 1000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினர்.
இறுதியில் ஆனந்த பாஸ்கர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சுவாமிஜி ஜப்பானந்த சுவாமிக்கு மரியாதை செலுத்தி பொதுமக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர்.