இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ்-துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் நல சங்கத்தின் 4ஆம் ஆண்டு குடும்ப விழா
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்துறையூர் ஜன-06
திருச்சி மாவட்டம் துறையூர் ஆர்த்தி திருமண மஹாலில் ஜனவரி 05 ஆம் தேதி இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் நல சங்கத்தின் 4 ஆம் ஆண்டு குடும்ப விழா நிகழ்ச்சி பிரம்மாண்ட நடைபெற்றது.துறையூர் தொகுதி தலைவர் என்.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் டயர் வி.சரவணன், மாவட்ட தலைவர் டைல்ஸ் திருமுகம், துணை தலைவர் மீசை பாலு, மாவட்ட பொருளாளர் டிங்கர் செல்வம், மாவட்ட செயலாளர் எம்பிடிசி கண்ணன், மாவட்ட துணை செயலாளர் அம்மன் பேட்டரி பி.கிருஷ்ணகுமார், துறையூர் தொகுதி தலைவர் நந்தகுமார், அவைத்தலைவர் பாபு, துணை தலைவர் அண்ணாமலை பாலு, செயலாளர் சிங்களாந்தபுரம் சி.ராஜதுரை, பொருளாளர் செங்கை ஏஎஸ் செந்தில்குமார்,செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் கௌவுரவ தலைவர் ஜெயம் புரோமோட்டர்ஸ் செல்வராஜ் வரவேற்புரையாற்ற எம்பிடிசி கண்ணன் நன்றி உரை ஆற்றினார்.
ஒருங்கிணைப்பாளர்கள், செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, சில்வர் பாத்திரம் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் கொண்ட சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்ப உறவுகளுக்கு அறுசுவை உணவு விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.