தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கு அரசு இலவச வீடுகளை வழங்கவேண்டும். பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜாதேவர் கோாிக்கை


தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 3ம் மைலில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் இசக்கிராஜாதேவர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசுகையில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோரை சில பிாிவுகளாக பிாித்து சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். அப்படி ஏதுவும் எங்களுக்குள் பிாிவினை கிடையாது.

அனைத்து தேவர் சமுதாயத்தினரும் ஓரே குடும்பமாகத்தான் வாழ்ந்து வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அப்படி தான் வாழ்வோம். எங்களுக்கான அடையாளங்களை 2026ல் நாங்கள் வாக்குகளின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் எங்களது செயல்பாடுகள் அமையும். எங்களை புறந்தள்ளிவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது.

என்று பேசினார்.
பின்னர் மே 18ம்தேதி 1998ம்ஆண்டு ஓய்வு பெற்ற நிதிபதி ரத்தினவேல்பாண்டியன் கமிஷன் பாிந்துரைக்க அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். தென்மாவட்டத்தில் எந்த நோக்கத்திற்காக ரத்தினவேல்பாண்டியன் கமிஷன் அறிக்கை அடிப்படையில் தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புகளை கொண்டுவந்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அனைத்து தொழிற்சாலைகளிலும் வடமாநில இளைஞர்கள் வேலை செய்கின்றன. தென்மாவட்டத்தில் பிறந்த பெரும்பாலான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. உடனடியாக அனைத்து தொழிற்சாலைகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் இன்னும் அதிகமான தொழிற்சாலைகளை தென்மாவட்டங்களில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 46 சட்டமன்ற தனித்தொகுதிகளையும் 7 நாடாளுமன்ற தனி தொகுதிகளையும் மறு வறையரை செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரைசூட்ட மத்திய அரசு ஓப்புதல் அளிக்க வேண்டும். தூத்துக்குடி பன்நாட்டு விமான நிலையத்திற்கு வஉசி பெயர் சூட்ட வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் பத்திாிகையாளா்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் இருக்கிறது. கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் உள்ள பத்திாிகையாளர்களுக்கு இதுவரை அந்த திட்டம் நிறைவேறவில்லை. உடனடியாக தூத்துக்குடி மாவட்ட பத்திாிகையாளர்களுக்கு இலவச வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *