கரூரில் சட்ட விரோதமாக லாரிகளில் அள்ளப்படும் கிரவல் மண் – கிருமினல் நடவடிக்கை எடுக்க பாமக மனு.
கரூர் மாவட்டம் அரவக்கிறிச்சி மற்றும் கடவூர் பகுதி குறிப்பாக வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம் , திரும்மாணிக்கம்பட்டி , நந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி இல்லாமல் தொடர்ந்து கிரவல் மண் சட்டவிரோதமாக லாரிகள் மூலமாக கொள்ளயடிக்கபடுவதை தடுக்க கோரி கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களுடன் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பேசுகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் வருவாய் அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து இந்த மண் கொள்ளையில் ஈடுபட்ட கனிம வளங்களை திருடி விற்பனை செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் மேலும் பர்மிட் மற்றும் ட்ரிப் ஷீட் ரசீது யாருடையது என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் வாரி லைசன்சை ரத்து செய்ய வேண்டும் மேலும் இது போன்ற நிகழ்வு தொடர்ந்தால் அனுமதி இன்றி போலியான ரசீதை பயன்படுத்தி மண்ணெடுத்து வரும் லாரிகளை கரூர் மாவட்ட பாமக சார்பில் சிறை பிடித்து சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
மாவட்ட தலைவர் தமிழ்மணி, கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் கா ராஜா, மு வரதராஜன் , மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் மலை முத்து, வே. விஸ்வநாதன், வன்னியர் சங்கம் பெ ரமேஷ், மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராஜசுந்தரம், கரூர் நகர தலைவர் பாலன், மாவட்ட துணை செயலாளர் சி முத்துகிருஷ்ணன், கிருஷ்ணராயபுரம் முருகன், கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி பி கே மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.