திண்டுக்கல் ரயில் நிலையம் 150-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது
1875-ம் ஆண்டு திருச்சி – மதுரை இடையே 154 KM தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டதன் மூலம் ரயில்வே வரைபடத்தில் திண்டுக்கல் இடம் பிடித்தது.
திண்டுக்கல்லை மையமாகக் கொண்டு பழனி வழியாக பொள்ளாச்சி மார்க்கமாகவும், கரூர் வழியாக ஈரோடு மார்க்கமாகவும் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன.
இதன் மூலம் வட மாவட்டங்களை 3 மார்க்கங்களில் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சந்திப்பு ரயில் நிலையமாகவும் திண்டுக்கல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வருவாய் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் பட்டியலிடப்படுகின்றன இந்த வகையில் திண்டுக்கல் 3-ம் நிலை ரயில் நிலையமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த 1875-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திண்டுக்கல் ரயில் நிலையத்தின் 150-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மேலும் பல வளர்ச்சி திட்டங்களையும், ரயில் சேவைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று ரயில் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..