கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் கொண்டாடிய சமத்துவ பொங்கல்…
ஆட்டம் பாட்டத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து மகிழ்ச்சியுடன் ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….
தஞ்சாவூர் பாரத் மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்தும் பொங்கல் கரும்பை தோரணமாக கட்டியும் வீடுகளைப் போல் குடில்கள் கட்டி வண்ணக் கோலம் இடும் மகிழ்ச்சியாக இந்த பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர் ,
வீட்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை பெற்றோருடன் கொண்டாடுவது ஒருவித அனுபவமாக இருந்தாலும் சக மாணவர்களோடு கல்லூரியில் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர் ஜாதி மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர் இந்த பொங்கல் விழாவில் கரகாட்டம் ஒயிலாட்டம் குச்சிப்புடி ,கும்மியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் மாணவர்கள் அனைவரும் பாட்டுப் பாடி நடனமாடி பொங்கல் விழாவை
கொண்டாடினர்.