கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்….
தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் நலமையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான உழவர் தின சிறப்பு பட்டிமன்றம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் இன்றைய சமுதாயம் மேம்பாட்டில் பெரிதும் துணை நிற்பது தொழில் நுட்பமா என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பட்டிமன்ற சிறப்பு நடுவராக கவிஞர் காசா வயல் குமார் முன்னிலையில் சிறப்பாக பேசினர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் நலமய இயக்குனர் முனைவர் சீமான் இளையராஜா வரவேற்றுப் பேசினார் இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு முனைவர் சங்கர் பதிவாளர் பொறுப்பு முனைவர் வெற்றிச்செல்வன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், முனைவர் ரமேஷ் குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.