தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 168 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 168 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்
முன்னதாக சமூக நலத்துறையின் ஆதரவற்ற பெண்கள் திருமண உதவியாக தனியார் பங்களிப்புடன் தலா 4 கிராம் 3 பெண்களுக்கும் தேனி அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் 2 தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 லட்சம் மதிப்பீலான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டையினையும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அகமலை ஊராட்சி மருதையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பழங்குடியினர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 16 ஆயிரத்து 199 மதிப்பிலான ஸ்மார்ட்போன் 12 நபர்களுக்கும் ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீலான பேட்டரி வீல்சேர் 2 நபர்கள் என மொத்தம் 25 நபர் களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாச்சலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளார் காமாட்சி மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்