தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு பரிசு சரியான முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை தூத்துக்குடி பறக்கும் படை தாசில்தார் செல்வகுமார் ஒவ்வொரு நியாயவிலைக்கடையாக ஆய்வு செய்தார் சின்னமணி நகர் சிலோன் காலனி ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் நேரில் சென்று பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்படுகிறதா சரியான முறையில் கொடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்
மேலும் டோக்கன் கொண்டு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்க வேண்டும் என்று பறக்கும் படை தாசில்தார் செல்வகுமார் நியாய விலை கடை பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்