திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
பல்கலைக்கழக துணைவேந்த நியமனத்தில் யுஜிசி யின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற முயற்சி என கூறி திருவாரூரில் திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி இன் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் எனவும் ஆர்எஸ்எஸ் நபர்களை திணிக்கின்ற முயற்சி எனவும் குற்றம் சுமத்தி துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்