திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா கிளை, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பா.சீனிவாசன், கேப்டன் பிரபாகரன் வழக்கறிஞர் மணி, பொருளாளர் வி.எல்.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ம.ரகுபாரதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, நகராட்சி ஆணையர் சோனியா, நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், நகராட்சி மேலாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் க.வாசு, ஊடகவியலாளர் வினோத் குமார், ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன், ஊடகவியலாளர் ஷாகுல் அமீது சு.அகிலன், வந்தை குமரன், அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மேலாளர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பேரணியில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் 100பேர் பங்கேற்றனர்.
முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிக்கக் கூடாது என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இறுதியில் கிளை இயக்குநர் அறிவொளி வெங்கடேசன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.