தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் தர மதிப்பீட்டு குழு (ICAC) சார்பாக “நிலையான எதிர்காலத்திற்கான உயர் கல்வியில் தர உத்தரவாதத்திற்கான புதுமையான அணுகுமுறைகள்” பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட் சகோதரி. முனைவர். சேசு ராணி, தலைமை உரையாற்றி முன்னிலை வகித்தார்.
கல்லூரி செயலர் அருட் சகோதரி. முனைவர். சாந்தாமேரி ஜோஷிற்றா மற்றும் கல்லூரி இல்ல தலைமை சகோதரி முனைவர். பாத்திமா மேரி சில்வியா வாழ்த்துரையாற்றினர்.
இக்கருத்தரங்கில், முனைவர். ஏஞ்சலின் சொர்னா, IQAC ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார்.
மேலும் இக்கருத்தரங்கில் முனைவர் A.S. பிரிசில்லா, டீன் மற்றும் விலங்கியல் துறை இணை பேராசிரியர், லேடி டோக் கல்லூரி, மதுரை, அவர்கள் கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG): செயல் மற்றும் தாக்கம் பற்றியும், முனைவர். S. அமலநாதன், வர்த்தகத்துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர், கிறிஸ்து பல்கலைக்கழகம், பெங்களூர், நிலையான சமூகங்களை உருவாக்குதல், நிலையான சமூகத்தின் கூறுகள், காலநிலை மாற்றம், வருமான சமத்துவமின்மை மற்றும் சமூக அநீதி ஆகியவை பற்றியும், மேலும் முனைவர் S. ஏஞ்சலின் வேதா, IQAC தலைவர் மற்றும் வேதியல் துறை இணை பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி, “பாடத்திட்டத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை இணைத்தல்” பற்றியும் விரிவுரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் 50 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. மேலும், இக்கருத்தரங்கில் 160 பேராசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர். முனைவர் M. தமிழ்ச்செல்வி, IQAC உதவி ஒருங்கிணைப்பாளர் மற்றும் வரலாற்று துறை உதவி பேராசிரியர், நன்றி கூற இக்கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது.