பொங்கல் திருநாளை முன்னிட்டு கால்நடைத்துறை சார்பாக மதுரை மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பொங்கல் விழா நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் சுப்பையன், துனை இயக்குநர் நந்தகோபால், மதுரை உதவி இயக்குநர் பழனிவேலு, பன்முக மருத்துவமனை உதவி இயக்குநர் சரவணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, திருமங்கலம் உதவி இயக்குநர் சரவணன் மற்றும் அனைத்து அலுவலக அமைச்சுப் பணியாளர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
