தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமையில் மாவட்ட எஸ்பி ஆர் சிவப்பிரசாத் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பொங்கல் பண்டிகை பொங்கல் விழாவாகும் அனைத்து தொழில்களுக்கும் அடித்தளமாய் விளங்கி உணவளித்து வரும் விவசாய பெருமக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

இந்த திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பானை உடைத்தல் பம்பரம் சுற்றுதல் கோலி விளையாடுதல் குண்டு எறிதல் கயிறு இழுத்தல் இசை நாற்காலி லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

மேலும் பணியாளர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு போட்டி பலகுரல் போட்டி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது மேலும் பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர் இந்த சிறப்பான பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *