ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா. அமர் சேவா சங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா இவ்விழாவில் அமர் சேவா சங்கத்தின் கமிட்டி உறுப்பினர் திருமதி பட்டம்மாள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது
இதில் அமர் சேவா சங்கத்தின் பணியாளர்களும் , மாற்றுத்திறனாளி மாணாக்கர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் மேலும் இவ்விழாவில் சமத்துவ பொங்கல் பணியாளர்களால் வைக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்பட்டு இதை தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டி உரியடித்தல் ஆகிய போட்டிகள் அனைத்து பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் நடத்தப்பட்டு இதைத் தொடர்ந்து பணியாளர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.