மதுரையில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், பொதுமக்கள், பேராசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள், பொது நல அமைப்பினர் என அனைவரும் ஒன்றிணைந்து தேசபக்தியை மாணவர் இடத்தில் பரப்பும் உயர்ந்த நோக்கத்துடன் தேச பக்தி வாகனம் உருவாக்கப்பட்டு தமிழகமெங்கும் தேசபக்தியை பரப்பும் முயற்சியாக தேச பக்தி வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.
தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் இணை இயக்குனர் ரமேஷ் அவர்கள், தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை இணை இயக்குனர் உச்சி மகாலிங்கம் அவர்கள் காந்தி அருங்காட்சியகத்
தின் செயலாளர் நந்தாராவ், பேராசிரியர் ஜெயக்கொடி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தேச பக்தி வாகனத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் நேதாஜி சுவாமிநாதன் செய்திருந்தார்.