விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள
ஒரு திரையரங்கில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம் திரையிட இருப்பதாக வந்த தகவலின்பேரில் டிஎஸ்பி பிரீத்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வி(தெற்கு)
அசோக்பாபு(வடக்கு) உள்ளிட்ட ஏறாலமான போலிசார் அந்த திரையரங்கத்திற்கு, சென்று திரை படம் தொடங்கும் முன்னரே, தடுத்து நிறுத்தினர்,

ஏற்கனவே இதற்கான டிக்கெட்டுகளை பெற்ற சில அரசியல் கட்சி, மற்றும் சில அமைப்புகள் மொத்தமாக பெற்று, இயக்கங்களில் உள்ளவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து, அனைவரும் இந்தபடத்தை காண அங்கு குவிந்திருந்தனர்

அவர்களிடம் இந்த படத்தை திரையிட அரசு தடை விதித்திருப்பதாகவும் தடையை மீறி இது ஒளிபரப்பக் கூடாது எனவும் பொதுமக்கள் உடனடியாக இங்கிருந்து களைந்து செல்லும்படி போலிசார் கேட்டுக்கொண்டனர்,

இந்நிலையில், அங்கிருந்த,அந்த படத்தை இயக்கி தயாரித்த கணேசன் என்பவர் போலிசாரிடம், “2012ல் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் மத்திய அரசின் தணிக்கை குழுவினரால்
தடை செய்யப்பட்டு தற்போது 2025 ஆம் ஆண்டு திரையிட அனுமதி கிடைத்திருப்பதாகவும், அதனை திரையிட ஏற்பாடு செய்ததாகவும், சற்றுநேரம் வாக்குவாதம் செய்தார்,

ஆனால் இது திரையிடுவதற்கு தணிக்கை குழுவினர் அனுமதி கொடுக்கவில்லை எனவும், இந்த படத்தை திரையிடுவதை, அனுமதிக்க முடியாது எனவும், அனைவரும், கலைந்து செல்ல வேண்டும் எனவும் டிஎஸ்பி பிரீத்தி, தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது

பின்னர் போலீசாரின் சமரசத்தை ஏற்று அனைவரும் படிப்படியாக கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *