ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது.விழாவில் அனைத்து மாணவிகளும் பாரம்பரிய உடை அணிந்து மேளதாளம், முழங்க, பொங்கல் பானை,வைத்து, சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.மாணவிகள் அனைவரும் பொங்கலிட்டனர் .கல்லூரி தாளாளர் தாயார் ரமணி தர்ம கிருஷ்ணராஜா கல்லூரி தலைவர் கீதா மற்றும் தாளாளர் மனைவி சுஜிதா இவ்விழாவினை சிறப்பித்தனர்.