கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கும், பள்ளி ஆசிரிய ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி வளாகத்தில், பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் தலைமையில் மண்பானை பொங்கல் படையல் வைத்து பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் கே.பாண்டியன், உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் இருபால் ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.