தமிழர் திருநாளான, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் சாலை ரோட்டில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்பு, பத்திரிகையாளர்கள் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், மேயர் ஜெகன் பெரியசாமி பொங்கல் விழாவில் பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, கரும்பு அடங்கிய 12 வகையான பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்..
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி பிரஸ் கிளப் மன்ற தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜி, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில், மன்ற கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள், லெட்சுமணன், மாரி ராஜா, முத்துராமன், ராஜன், கண்ணன், இருதயராஜ், பிரஸ் கிளப் உறுப்பினர்கள், அகமது ஜான், காதர், கற்பகநாதன், பாலகுமார், இசக்கி ராஜா, அந்தோணி நீதி ராஜ், சேகர், மாரிமுத்து, மாணிக்கம், ரமேஷ் ஐயர், அருள் ராஜ், சித்திக், சூர்யா, கருப்பசாமி, அறிவழகன், கார்த்திக், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.