திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தனிப்பிரிவு காவலர் அறிவழகனுக்கு கிடைத்த தகவலின் படி, வலங்கைமான் சப் இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன், இரண்டாம் நிலை காவலர் அருள்தாஸ், முதல் நிலை காவலர் கல்யாண சுந்தரம், கிரைம் டீம் தலைமை காவலர் மனோகரன், செந்தில்குமார் ஆகியோர் உத்தாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபரை பிடித்தனர். விசாரணையில் உத்தாணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து சுமார் 120 கிலோ எடை கொண்ட பான் பராக், குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மதிப்பு ரூபாய் 80 ஆயிரம். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவை சேர்ந்த ராஜாராமன் என்பவரிடம் பொருட்களை வாங்கி வந்ததாக கூறினார். இதனை அடுத்து கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த மாதாராம்ஜி என்பவர் மகன் ராஜாராம்,மற்றும் உத்தாணியை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தியதாக இரு சக்கர வாகனம் மற்றும் ராஜா ராமின் நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *