கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
திருவையாறில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா..
விவசாயிகள் பொங்கலோ பொங்கல்.. என உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்…
தமிழர்களின் பாரம்பரிய தைப்பொங்கலை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் வேளாண் நிலை இயக்குனர் வித்யா மற்றும் தஞ்சாவூர் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் வெங்கட்ராமன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்திரன் ,பிரனேஷ் இன்பென்ட்ராஜ், ஜீவானந்தம் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு “பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியாக கொண்டாடினர்…