தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு முடிவின் படி எதிர்வரும் 2025 – மே மாதம் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்கு மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மாநில மாநாட்டு நிதியாக ரூ.10,ஆயிரத்தை மாவட்டத்தலைவர் முருகேசன் மற்றும் மாவட்டப் பொருளாளர் எமிமால் ஞானசெல்வி ஆகியோர் வழங்கி மாநாட்டு நிதியை முதல் மாவட்டக்கிளையாக மதுரை மாவட்டக்கிளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.