தேசூர் பகல் நேர பராமரிப்பு மைய மாணவர்களுக்கு புத்தாடை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்படும் பகல் நேர பராமரிப்பு மையத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் கிருபாகரன் பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன் சிறப்புரை ஆற்றினார். மேலும் ஆசிரியர் பயிற்றுநர் பாலாஜி, சிறப்பு ஆசிரியர் கிரிஜா ஆகியோர் கருத்துக்களை வழங்கினர். சிறப்பு ஆசிரியர் பூங்காவனம் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி