C K RAJAN Cuddalore District Reporter
9488471235…
கடலூர் மஞ்சக்குப்பத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
இதில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஒரு அணி யாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இன்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாவட்டசெயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான தரப்பினர் வந்திருந்தனர். அப்பொழுது அங்கே ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் என மற்ற பிரிவினரும் திரண்டு இருந்தனர்
இதற்கிடையே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணி விப்பதற்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தரப்பினரை அதிமுக வின் எடப்பாடி பழனிச் சாமி தரப்பு தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மாலை போட்ட பிறகு தான் எம்ஜிஆர் சிலைக்கு மற்ற தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தடுக்கப் பட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு உருவானது.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த புது நகர் போலிசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதற்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் எம் ஜி ஆர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்டனர்.
இதனால் தடுத்து நிறுத்திய அதிமுக பயனில்லாமல் ஏமாற்றத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்டனர்.
கட்சி நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளில் அதிமுகனவரின் செயல்பாடு கடலூரில் சலசலப்பை ஏற்படுத்தியது.