திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அருகில் 108-ஆவது பிறந்த தின விழா அஇஅதிமுக சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர் தலைமை வகித்தார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்,
அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அரசினர் மருத்துவமனை அருகில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி செயலாளரும், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரும் ஆன மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெய. இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர். ஜி. பாலா, எஸ். மூர்த்தி, தொழுவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், நகர துணை செயலாளர்கள் புஷ்பா மகாலிங்கம், பட்டம் கிருஷ்ணமூர்த்தி, கிளைகழக செயலாளர்கள் தொழுவூர் சின்னப்பா, தென்குவளை வேலி பால தண்டாயுதபாணி, வார்டு செயலாளர்கள் மோகன், ராஜா, மதுசூதனன், அருள்முருகன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.