தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கோட்டகுப்பம் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கோட்டகுப்பம் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
இதனை ஒட்டி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கோட்டகுப்பம் அதிமுக நகர செயலாளர் கணேசன் தலைமையில் எம். ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும், உணவு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கொண்டாடப்பட்டது. இதில் கோட்டகுப்பம் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.