தருமபுரி
பசுமைத் தாயகத்தின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் ஆணைக்கினங்க தருமபுரி கிழக்கு மாவட்ட பசுமைத்தாயகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் காலை 11மணியளவில் ஒடசல்பட்டி கணவாய் மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் மாவட்ட தலைவர் P.அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட செயலாளர் கே.என்.வீரமணி அவர்கள் வரவேற்று பேசினார்
இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல. வேலுசாமி அவர்கள் தருமபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க.செயலாளர் இரா அரசாங்கம் அவர்கள் இளைஞர் சங்க மாநில செயலாளர் பி .வி செந்தில் அவர்கள் பசுமைத் தாயகத்தின் மாநில துணை செயலாளர் க.மாது அவர்கள் மற்றும் பசுமைத்தாயகத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் மாவட்ட துணை தலைவர்கள் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பசுமைத் தாயகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பசுமைத்தாயகத்தின் வளர்ச்சி பணிக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இறுதியில் பசுமைத் தாயகத்தின் மாவட்ட துணை செயலாளர் சதீஷ் குமார் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது