கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

கும்பகோணத்தில் துவரங்குறிச்சி சௌராஷ்ட்ரா சபையின் புதிய கட்டிடத்தை கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள துவரங்குறிச்சி தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சௌராஷ்டிரா சபையின் கட்டிட திறப்பு விழா துவரங்குறிச்சி சௌராஷ்ட்ரா சபைத் தலைவர் சுதர்சனன் தலைமையில் நடைபெற்றது..

இதில் துவரங்குறிச்சி சௌராஷ்ட்ரா சபை துணை பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் ரவி, துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ்,சீனிவாச ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவரங்குறிச்சி சௌராஷ்டிரா சபை துணைச் செயலாளர் சீனிவாசராஜன் வரவேற்பு ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ராயா சீனிவாசன், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், சிட்டி யூனியன் வங்கி முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன், அதிமுக அயூப் கான், கும்பகோணம் மாநகர துணை மேயர் சு.ப. தமிழழகன், மங்கலம் ஏஜென்ஸ் சேதுராமன், ரதிமீனா குரூப்ஸ் பிஎஸ் சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக ராமநாதன், மணிவண்ணன், ராஜேஷ் ராம், ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.முடிவில் துவரங்குறிச்சி சௌராஷ்டிரா சபை துணைத் தலைவர் ராம குசலம் நன்றி கூறினார்.