எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்.நீரை வடிகட்ட மும்புரம் காட்டும் விவசாயிகள் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.இதனால் விழுக்காடு,அட்டகுளம், நல்லான்சாவடி,நைனாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மூலம் சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர்.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக நேரடி நெல் விதைப்பு செய்த சம்பா சாகுபடி பயிர்கள் அழிந்த நிலையில் கூடுதல் விலைக்கு நாற்றுகள் வாங்கி நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தற்பொழுது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது நேற்று இரவு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் மழை பெய்தால் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க நேரிடும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வயலில் தேங்கியுள்ள மழை நீரை வடிகட்டும் பணிகளிலும் முன்புறம் காட்டி வருகின்றனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்