ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
கலைஞர் கணினி மையத்தை முன்னாள் அமைச்சர் ராசா திறந்து வைத்தார்.
பெரம்பலூர்.ஜன.19. போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் ஏற்பாட்டில்,
குன்னம் தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில்,இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கான,
“கலைஞர் கணினி பயிற்சி மையத்தை”
கழக துணைப் பொதுச்செயலாளரும் (மேனாள் ஒன்றிய அமைச்சர்,) நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குன்னத்தில் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா. துரைசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.