கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
நன்னிலம் அருகே குடவாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மு.இனியன் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த் பங்கேற்பு…

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடவாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மு.இனியன் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழோவியா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் வீரவணக்க பேரணையில் கலந்துகொண்டு இனிய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மைய மாவட்ட செயலாளர் தங்க .தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி, மண்டலச் செயலாளர்கள் அறிவழகன், சதா,. சிவகுமார், மண்டலத் துணைச் செயலாளர் சாதிக், முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன், சுமா. செல்வராஜ், அருள் செல்வம் ,மோகன் குமார், ராஜ்குமார் , டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சார்லஸ் மற்றும் முன்னாள் இன்னாள் மண்டல மற்றும் டெல்டா மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டு கொட்டும் மழையில் பேரணியாக சென்று வீரவணக்கம் செலுத்தினர்.