தூத்துக்குடி மாநகராட்சி மாநகரில் பாதாள சாக்கடை அமைத்துள்ளது இந்த பாதாள சாக்கடை வழியாக பல வார்டுகளில் கழிவு நீர் ரோடுகளில் சென்று கொண்டு தான் உள்ளது இந்த நிலையில் ஆண்டாள் தெரு மெயின் ரோடு கருத்த பாலம் அருகில் உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக பல மாதங்களாக கழிவு நீர் வெளியே வருகிறது இதனால் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்
அவ்வழியாக நடந்து செல்கின்ற பொதுமக்கள் மீது வாகனத்தில் செல்பவர் கழிவுநீரை பொதுமக்கள் மீது தெறித்து விடுகின்றனர் இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல மாதங்களாக புகார் அளித்து வருகின்றனர்
ஆனால் புகாரை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை சில நேரங்களில் பாதாள சாக்கடை மூடி வலியாக மனித கழிவுகளும் வெளியே வருகிறது இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது