காரமடை எஸ்விஜிவி பள்ளி ஆண்டு விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ்பாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .
விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் லோகு முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சசிகலா ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கி பேசுகையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு ஒரு லட்ச ரூபாயும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்றார் .
தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு பேசியதாவது , மாணவர்களாகிய உங்களுக்கு கவனச் சிதறல் இருக்கக்கூடாது இந்த சமுதாயம் போற்றும் நபராக நீங்கள் வரவேண்டும் சாதிக்க நினைத்தால் சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்த வேண்டும். சாக்கு சொன்னால் சாதிக்க முடியாது . உங்களால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெருமை அடைய வேண்டும் என்று பேசினார் விழாவில்.செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் எம்.ஆர்.ராஜேந்திரன்,வேலுச்சாமி, தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவசதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் .பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது