பண்ணுருட்டி செந்தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா, திருவள்ளுவர் தின விழா, சங்கத்தின் 150 -வது மாதக் கூட்டம் ப ண்ணுருட்டி திருவதிகை எஸ்.வி திருமண மண்டபத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவர் ப.ச. வைரக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் தமிழ் வாழ்த்து பாடல்களை கவிஞர் முருகு. சிவானந்தம் அவர்கள் பாட நிகழ்ச்சி தொடங்கியது பொதுச் செயலாளர் ப.த. தங்கவேலு வரவேற்புரை நிகழ்த்தினார். பாவலர் சுந்தர பழனியப்பன் பொங்கல் விழாவின் சிறப்புகளையும் சங்கத்தின் செயல்பாடுகளையும் குறித்து தொடக்க உரை நிகழ்த்தினார்.
புதுவை மரபு பாவலர் ராஜா ரங்கராமானுஜம், புதுவை அருந்தமிழ் அறியனை உலக தமிழ் ஆய்வு மைய நிறுவனத் தலைவர் கவிஞர் கா. சரவணன், விழுப்புரம் பவ்டா எஃப். எம் 90.4 இணை பொது மேலாளர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நல்கி சிறப்பு செய்தனர். சின்னசேலம் தமிழ் சங்கத் தலைவர் கவிச்சிற்பி கவிதை தம்பி அவர்கள் தலைமையில் இன்பம் பொங்கட்டும் எனும் தலைப்பில் பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது
செந்தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆண்டிற்கான நாட்காட்டியை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்கள்.
பண்ணுருட்டி செந்தமிழ் சங்கத்தின் கவிஞர்கள் அனைவரும் கவிதை பாடி சிறப்பு செய்தனர் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி ,கட்டுரை போட்டி, நடிப்பு என திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள். பண்ணுருட்டி ஆருத்ரா நாட்டிய பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் நடைபெற்றது.
விழாவில் ராஜவேலு ஐய்லு, நாகலட்சுமி பேபிதாசன் தமிழ்ச்செல்வி செந்தில்குமார், முருகு.சிவானந்தம், இராஜ்குமார் இராமலிங்கம் வினோத் கோபிநாத் பத்மபாரதி கோபாலகிருஷ்ணன் சாம்ப.நட ராஜன் ஸ்ரீதர் பிரகாஷ் வைத்தியநாதன் ஆகியோர் கவிதை பாடினர் மகாவிஷ்ணு வைத்தியநாதன் கீதாலட்சுமி ஆகியோர் விழாவை நெறியாளுகை செய்தனர் . அரங்க. கிருஷ்ணன் கவியரங்கை நெறியாள்கை செய்தார் மாணவர் அரங்கை தங்கவேல், குமாரி யோகேஷ் நெறியாளுகை செய்தார்கள் பொருளாளர் இராம .சுதாகரன் நன்றி உரை நிகழ்த்தினார்.