தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலித் மக்களை இழிவாக பேசியிருந்தார். அதனை கண்டிக்கும் வகையில் தர்மபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பு இந்திய மூலநிவாசி காவல் படை மற்றும் தலித் விடுதலைக் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது திமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலித்துகள் மற்றும் ஜாதி வாரியாக மிகவும் இழிவாக பேசியதை கண்டித்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.