எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், 2 மடிகணிணி திருட்டு.இரண்டு தனிப்படைகள் அமைத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த விளந்திட சமுத்திரம் ரத்தினாம்பாள் நகரை சேர்ந்தவர் ரகுராமன். இவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா மயிலாடுதுறையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருவதால் மகள்களுடன் மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார்.
வார விடுமுறை நாட்களில் மட்டும் சீர்காழியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் பொங்கல் விடுமுறையில் சீர்காழி வீட்டில் தங்கி விட்டு கடந்த 19ஆம் தேதி மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று வெளிநாட்டில் உள்ள ரகுராமன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா செயல்படவில்லை என மஞ்சுளாவுக்கு தகவல் தெரிவித்ததுடன் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்க அறிவுறுத்தியுள்ளார்
இதனை அடுத்து மஞ்சுளா தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ளவருக்கு தொடர்பு கொண்டு வீட்டில் சிசிடிவி கேமரா செயல்பட வில்லை வீட்டிற்கு சென்று பார்க்கு கூறியுள்ளார். அவர்களும் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு கதவுகள் திறந்து கிடப்பதையும் சிசிடிவி கேமராக்கள் உடைந்து இருப்பதையும் உறுதி செய்தனர் இதனை அடுத்து சீர்காழிக்கு வந்த மஞ்சுளா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 மடிக்கணினிகள், சிசிடிவி கேமரா பதிவு எந்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது
இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் டிக்ரிஷி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பாறை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.