குடியரசு தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
தமிழக அரசு 2025 ஆம் ஆண்டு 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் எப் எல் 1 மற்றும் பார்கள் எப் எல் 2 எப் எல் 3 எப். எல் 4 ஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனை மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆணையிடப்பட்டது
இதன்படி 2025 ஆம் ஆண்டு 26 1 2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான கடைகள் மதுபானக்கூடங்கள் ஆகியவை கட்டாயம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் மதுபானங்கள் விற்பனை ஏதும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறு த்தப்படுகிறது மேலும் மேற்காணும் நாளில் விதி மீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மதுபான கடை பணியாளர்கள் மற்றும் உரிமையாள ர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்கள்.