தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420.
தனியார் பள்ளி வாகன மோதிய விபத்தில் சிறுமி படுகாயம்!
தாராபுரம் அருகே தேன்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வாகனம் மோதி 3-வயது சிறுமி படுகாயம் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காட்டம்மன் புதூர் பகுதியில் இன்று மாலை தாராபுரத்தில் உள்ள தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மூன்று வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
காட்டம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு முத்ராதேவி என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் காட்டம்மன் புதூர் பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி குழந்தையுடன் ஸ்ரீதர் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தில் பயணித்தார் அப்பொழுது தாராபுரத்திலிருந்து காட்டம்மன் புதூர் பகுதிக்கு வந்த தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாகனம் அதிவேகமாக வந்து ஸ்ரீதரின் எக்ஸ் எல் சூப்பர் மேல் மோதியது இதில் நிலை தடுமாறிய ஸ்ரீதர் தனது மனைவி விஜயலட்சுமி. குழந்தை முத்ராதேவி ஆகியோர் வாகனத்தின் பின்பகுதியில் விழுந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த குழந்தை முத்துராதேவியை. அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி பின்னர் தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் வாகனத்தை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
அப்போது அப்பகுதியில் வரும் தனியார் பள்ளி வாகனங்கள் அதிவேகத்தில் வருவதாகவும் சாலை குறுகலாக உள்ளதால் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தையை முதல் உதவி சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்:-
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தனியார் பேருந்து மாதிரி இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தான் அதே போல இன்றும் அதிவேகமாக வந்த தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாகனத்தை நாங்கள் சிறை பிடித்து இப்பகுதியில் வரும் வாகனங்கள் மெதுவாக வர வேண்டும் எனவும் இன்று பலத்த காயமடைந்த முத்துராதேவி, குழந்தைக்கு தேன்மலர் பள்ளி நிர்வாகம் முழு செலவையும் ஏற்றுக்கொண்டு தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் போலீசார் பள்ளி வாகனத்தை காவல் நிலையம் கொண்டு செல்லாமல் அனுப்பி வைத்தனர். இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும் வாகன ஓட்டுநர் தினம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.