தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மத்திய ,மாநில அரசின் அறிவுறுத்தலின்
படியும் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன்
ஆலோசனையின்படி 36 -வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி 22 01 – 2025 புதன் கிழமை அன்று
நடைப்பெற்றது.
ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் எம் கனகவல்லி தலைமையில் தாங்கினார்.தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில்
தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்கள் கலந்து
மோட்டார் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பது , உயிர்களை பாதுகாப்பது வாகனங்களை எப்படி பாதுகாப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
இதில் ஏராளமான பொது மக்களும் அலுவலக பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாகன ஒட்டுநர்கள் கலந்து கொண்டனர்.