பரமக்குடியில் நேற்று நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை நோக்கி காலணி வீசிய வாலிபர் கைது
பரமக்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை திட்டியபடி காலணியை வீசியவர்
மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசியின் சகோதரர் ரமேஷ் பாபுஆவார் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக ரமேஷ்பாபுவின் மனைவி ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.
இதனால் ரமேஷ் பாபு தனது வீட்டிற்கு செல்லாமல் சாலை ஓரங்களில் தங்கி உறங்கும் நிலையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி பாண்டி மகாராஜா வழக்குகளை விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தில் சுற்றி திரிந்த ரமேஷ் பாபு, திடீரென நீதிபதியை அவதூறாகப் பேசியதுடன் தான் அணிந்திருந்த காலணியை கையில் எடுத்து நீதிபதியை நோக்கி வீசியுள்ளார். அந்த காலணி, வழக்கறிஞர்கள் அமரும் இடத்தில் விழுந்தது இதையடுத்து ரமேஷ் பாபுவை பிடித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ரமேஷ்பாபு. குடும்பத்தினர் ஆதரவு இன்றி சுற்றி திரிவதால் மனநல பாதிப்பு குறைபாடு உடையவர் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்ற உதவியாளர் மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில்h ரமேஷ் பாபுவை கைதுசெய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.